ஓஸ்மேன் டெம்பலேக்கு 2025 ஒன்ஸ் டி’ஓர் விருது

top-news

பாரிஸ், செப். 13-

செய்தி-வெற்றி மைந்தன்

பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியின் தாக்குதல் வீரரான ஓஸ்மேன் டெம்பலே, பிரபல பிரெஞ்சு பத்திரிகையான ஒன்ஸ் மொண்டியல் நடத்திய 2025 ஒன்ஸ் டிஓர் விருதை வென்றுள்ளார். 28 வயதான இந்த பிரெஞ்சு வீரர், 32.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, பார்சிலோனாவின் இளம் அதிசய திறமையாளரான 18 வயது லமினே யமாலைப் பின்னுக்குத் தள்ளி இந்த மதிப்புமிக்க விருதை கைப்பற்றினார்.

இந்த தனிநபர் விருது, டெம்பலேயின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு, அவரது தொழில்முறை வாழ்க்கையில் செய்த தியாகங்களுக்கு அங்கீகாரமாக கருதப்படுகிறது. இந்த விருது, களத்தில் அவரது அர்ப்பணிப்பு, திறமையை உலகளவில் பறைசாற்றுகிறது. விருது வென்ற பின்னர், டெம்பலே தனது மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.

இந்த விருது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. இது, நான் கடந்த பருவம் முழுவதும், மேலும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கடினமாக உழைத்ததற்கு ஒரு சான்றாக அமைகிறது. எனது தியாகங்கள், செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டதால், இந்த தனிநபர் விருது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது என்று பிரான்ஸ் தேசிய அணியின் இந்த வீரர் உருக்கமாக தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *