ஓஸ்மேன் டெம்பலே பெலன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார்
- Tamil Malar (Reporter)
- 23 Sep, 2025
பாரிஸ், செப். 24-
செய்தி-வெற்றி மைந்தன்
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியின் முன்னணி வீரர் ஓஸ்மேன்
டெம்பலே, பெலன் டி'ஓர் விருதை வென்று
வரலாறு படைத்தார். இவர், பார்சிலோனாவின் இளம் நட்சத்திரம்
லமினே யமாலை பின்னுக்குத் தள்ளி இந்த மதிப்புமிக்க விருதை
கைப்பற்றினார். கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெம்பலே, சாம்பியன்ஸ் லீக் வெற்றியுடன் தனது அணிக்கு பெருமை சேர்த்தார்.
28 வயதான இந்த பிரெஞ்சு வீரர், கடந்த சீசனில் அனைத்து
போட்டிகளிலும் 53 ஆட்டங்களில் விளையாடி 35 கோல்கள் அடித்து அசத்தினார். இவரது அற்புதமான ஆட்டத்திற்கு பலனாக, பிஎஸ்ஜி அணி மூன்று கோப்பைகளை வென்றது. இதில் லீக் 1, பிரெஞ்சு கோப்பை, முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக்
கோப்பையும் அடங்கும். இந்த சாதனைகள், டெம்பலேவின்
திறமையையும், அவரது அணிக்கு அளித்த பங்களிப்பையும்
எடுத்துக்காட்டுகின்றன.
டெம்பலேவின் இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு,
அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது. இவரது வேகம்,
திறமையான கோல் அடிக்கும் ஆற்றல் மற்றும் ஆட்டத்தை மாற்றும் திறன்,
பிஎஸ்ஜி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



