பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, செப். 3 –

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருந்த அந்த பழமையான கோவில், லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதரஸா கட்டுவதற்காகக் கோவில் அமைந்திருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் அந்த கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை இந்து சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்ட செய்தி மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *