போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்; பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
திருமலை, ஜூலை 30-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம், தங்குமிடம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள், போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு போலி இணையதளம் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு, பக்தர்களிடம் இருந்து பணம் மோசடி செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



