முன்னாள் தேசிய கால்பந்து வீரர் பி. தர்மலிங்கம் காலமானார்
- Tamil Malar (Reporter)
- 13 Sep, 2025
கோலாலம்பூர், செப். 14-
செய்தி-வெற்றி மைந்தன்
1980களில் மலேசிய தேசிய அணியில் விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் பி.
தர்மலிங்கம், இன்று தனது 64ஆவது வயதில்
காலமானார். மலேசிய கால்பந்து சங்கத்தின் (துணைத் தலைவர் டத்தோ எஸ். சிவசுந்தரம்,
இந்த துயரச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
தர்மலிங்கம், தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்ததை அடுத்து,
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்றார். ஆனால், அவர் அங்கு இறுதி மூச்சை விட்டார்.
மறைந்த தர்மலிங்கம் மைதானத்திலும், மைதானத்திற்கு
வெளியேயும் ஒரு அர்ப்பணிப்பு மிக்க, ஒழுக்கமான நபராக
இருந்தார் என்று சிவசுந்தரம் இன்று தொடர்பு கொள்ளப்பட்டபோது தெரிவித்தார்.
1961இல் பிறந்த தர்மலிங்கம், 1980களில் மலேசியாவின்
ஹரிமாவ் மலாயா அணி தென்கிழக்கு ஆசியாவில் மரியாதை பெற்றிருந்த காலத்தில் தேசிய
அணியின் முக்கிய உறுப்பினராக இருந்தார். தற்காப்பு ஆட்டக்காரரான அவர், தனது அமைதியான ஆளுமை,
ஒழுக்கமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். பண்டமாரானில் உள்ள
ஸ்டார்பிரைட் எஸ்சி கிளப்பில் அவர் முக்கிய பங்காற்றினார், மேலும்
மறைந்த கோல்கீப்பர் ஆர். அருமுகத்தின் வழிகாட்டுதலின் கீழ் மலேசியா பி அணிக்கு
தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



