RM 15 மில்லியன் மதிப்பிலான சமையல் எண்ணெய் பறிமுதல்!
- Shan Siva
- 30 Sep, 2024
கோலாலம்பூர், செப் 30:
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) வெள்ளிக்கிழமை காஜாங்கின் தாமான் ரெகோவில் உள்ள
சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் சுமார் 15 மில்லியன் ரிங்கிட்
மதிப்புள்ள கிட்டத்தட்ட ஆறு டன் சமையல் எண்ணெயைக் கைப்பற்றியது.
சிலாங்கூர் KPDN உடன் ஒருங்கிணைந்து, அமலாக்க அதிகாரிகள் மதியம் 2.58 மணியளவில் மேற்கொண்ட சோதனையில் உள்ளூர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் 300 பெட்டிகளில் 5,100 பேக்கேஜ்களில் (5.1 டன்கள்) மானிய விலை சமையல் எண்ணெய் மற்றும் 850 லிட்டர் கூடுதல்
தொட்டியைக் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக மேல்
விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், முதல் முறை குற்றவாளிகளுக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *