MySejahtera, EMR மூலம் நோயாளிகள் காத்திருப்பு நேரம் குறைந்தது - துணை அமைச்சர்
- Surendran Sumdraraj
- 08 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 8-
பொது சுகாதார அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் மாற்றம், நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தை பெரிதும் குறைக்க உதவியுள்ளது எனவும் மின்னணு மருத்துவப் பதிவுகள் அல்லது EMR மற்றும் MySejahtera செயலியின் பயன்பாட்டின் மூலம், நோயாளிகள் காத்திருக்கும் காலம் மூன்று மணி நேரத்திலிருந்து 60 நிமிடங்களாக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை துணையமைச்சர், Datuk Hanifah Hajar Taib தெரிவித்தார்.
Sistem Pengurusan Klinik Berasaskan Awan (CCMS) செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, நோயாளிகள் மருத்துவ அதிகாரியைச் சந்திக்க மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
அது நோயாளிகளின் வருகை எண்ணிக்கை மற்றும் கிளினிக்கின் பணிச்சுமையைப் பொறுத்து மாறுபட்டதாக அவர் கூறினார்.
ஆனால், CCMS செயல்படுத்தப்பட்ட பிறகு, 81 விழுக்காடு நோயாளிகள் 60 நிமிடங்களுக்குள் மருத்துவ அதிகாரியைச் சந்திக்க முடிந்துள்ளதாக அவர் விளக்கினார்.
மீதமுள்ள 19 விழுக்காடு நோயாளிகள், அவர்களின் உடல்நிலை மற்றும் கிளினிக்கின் பணிச்சுமையைப் பொறுத்து, 60 முதல் 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் Hanifah Hajar Taib இதனை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



