கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று மாலை பதவியேற்பு

top-news

பெங்களூர், ஜூன் 3 –

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று (புதன்கிழமை) மாலை பதவியேற்க உள்ளார். பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ஆளுநர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து கொள்ளவுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், மாநிலத்தின் 25-ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதன் மூலம் கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக சில முக்கிய நிர்வாக அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை அமைப்பு குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் டி.கே.சிவக்குமார் தீவிர ஆலோசனை நடத்தி வந்த நிலையில், முதல் கட்டமாக சில அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *