‘பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி’ – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
சென்னை, ஆகஸ்ட் 14 —
திமுக தற்போது பாஜகவுடன் நேரடிக் கூட்டணி அமைத்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் திமுக பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்ற கருத்துகள் திமுக மற்றும் பாஜக தரப்பில் வெளியாகி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மத்திய அமைச்சராகலாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற கருத்துகள் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது தெரியவருவதாக நிர்மல் குமார் கூறினார்.
மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக இதுவரை தெளிவாகக் கூறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இதன் மூலம் பாஜகவுடன் திமுக நேரடியாகக் கூட்டணி வைத்திருப்பது நிரூபணமாகிறது என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



