சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் முதலமைச்சர் விஜய், விதி 110-ன் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தங்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அதுகுறித்து உடனடியாக விவாதிக்க அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, அவைக்குள் கோஷமிடாமல் வெளியே சென்று கோஷங்களை எழுப்புமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் இருந்து வெளியேறும்போதும், “அனுமதி கொடு, அனுமதி கொடு” என அவர்கள் கோஷங்களை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



