சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு – 20 நிமிடங்கள் அமளி

top-news

சென்னை, செப். 7 –

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது கடும் அமளி ஏற்பட்டது. முதலமைச்சர் விஜயின் பதிலுரைக்குப் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய பின்னர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

அப்போது அவர் முன்வைத்த கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்க திமுக உறுப்பினர்கள் வாய்ப்பு கோரினர். ஆனால், அவர்களுக்குப் பதிலளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சுமார் 20 நிமிடங்கள் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைக்கு அனுமதி கிடைக்காததைக் கண்டித்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *