முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசிய திமுக நிர்வாகி: கனிமொழி கண்டிப்பு

top-news

சென்னை, அக். 20: முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய திமுக மகளிர் அணி நிர்வாகியை, திமுக எம்.பி. கனிமொழி கண்டித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மேயர் பிரியா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திமுக மகளிர் அணி நிர்வாகி சுதா தீனதயாளன், முதலமைச்சர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அரசியல் எதிரிகள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதைக் கொண்டு தங்களது பேச்சின் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் வழியில் வந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, நாகரிகத்துடனும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *