சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி: 10 லட்சம் பேர் வெளியேற்றம்; ஷாங்காயில் 80 சதவீத விமானங்கள் ரத்து

top-news
FREE WEBSITE AD

ஷாங்காய், ஆக. 10-

 சீனாவின் கிழக்குப் பகுதியை டால்பின் சூறாவளி கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜெஜியாங் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் சூறாவளி கரையைக் கடந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. யூஹுவான் மற்றும் வென்லிங் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஷாங்காயில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் சுமார் 80 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 2,230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த நாளும் 720-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சோ விமான நிலையத்திலும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ மற்றும் வென்ஜோ விமான நிலையங்களிலும் சேவைகள் நிறுத்தப்பட்டன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *