அதிகாரத்தை காட்டாமல் மக்களின் நலனுக்காக செயல்படுங்கள் – நிர்மலா சீதாராமன்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஜூலை 27-

அதிகாரத்தை வெளிப்படுத்தும் மனப்பான்மையைத் தவிர்த்து, பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அரசு அதிகாரிகளின் முதன்மைப் பொறுப்பு மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதாக இருக்க வேண்டும் என்றார். அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களின் பிரச்சினைகளை விரைவாகவும் மனிதநேயத்துடனும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“அதிகாரத்தை காட்டுவதற்குப் பதிலாக, மக்களின் நலனுக்காக உழையுங்கள். நேர்மையான வரி செலுத்துவோர் அலுவலகம் தோறும் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. அவர்களின் குறைகளை எளிதாகவும் விரைவாகவும் தீர்க்கும் நிர்வாக முறையை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *