ஈரானுக்கு ஆயுதங்கள் விற்கக் கூடாது – சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

top-news

அமெரிக்கா, ஜூலை 25-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு சீனா மற்றும் ரஷியா எந்த வகையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி நடந்தால், அது அந்த இரு நாடுகளின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அவர் தனது Truth Social சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் தனது பதிவில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னிடம், எந்தச் சூழ்நிலையிலும் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்றும், அந்த உறுதி சீன நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்ததாகக் கூறினார். அதேபோல், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய சூழலில் சீனாவோ அல்லது ரஷியாவோ ஈரானுக்கு நேரடியாக ராணுவ உதவி வழங்குவதாக தாம் நம்பவில்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார். இந்த விவகாரம் மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தின் மத்தியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *