‘கடமைக்கு என படம் நடிக்க விரும்பவில்லை’ – நடிகர் ஆரவ்
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
சென்னை, ஆக. 14 —
நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், கடமைக்காக படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ‘விடாமுயற்சி’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘அருள்வான்’ படத்திலும் அவரது நடிப்பு கவனம் பெற்றது. தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதுகுறித்து ஆரவ் கூறுகையில், தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருப்பதே தனது படங்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படுவதற்குக் காரணம் என்றார்.
“சினிமா என்பது நீண்ட பயணம். இங்கு கடமைக்கு என படம் நடிக்க விரும்பவில்லை. நல்ல படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதே என் எண்ணம்,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



