பெர்சாத்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை! பாஸ் கட்சிக்கு பொறாமை! - ராமசாமி காட்டம்

top-news

பெட்டாலிங் ஜெயா: முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி, இஸ்லாமியக் கட்சியான பாஸ் கட்சியை மறைத்துவிடும் என்ற பயம் மற்றும் ஒருவேளை பொறாமையின் காரணமாகவே பாஸ் கட்சி, பெர்சாத்து உடனான உறவைத் துண்டித்துக்கொண்டதாக உரிமை கட்சித் தலைவர் பி. ராமசாமி இன்று தெரிவித்தார்.

தனது ஃபேஸ்புக் பதிவில், உறவைத் துண்டிக்காவிட்டால் பெர்சாத்துவின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து, பாஸ் கட்சியை மறைத்துவிடும் என்று பாஸ் கவலைப்படுவதாக ராமசாமி கூறினார்.

முகைதீன் தலைமையிலான தளர்வான கூட்டணியான இக்கத்தான் பிரிஹாத்தின் ரக்யாத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உரிமை கட்சியின் தலைவரான ராமசாமி, பெர்சாத்துவை விட பாஸ் கட்சிக்கு வலுவான தேர்தல் ஆதரவு இருந்தாலும், அதன் செல்வாக்கு பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் சில மாநிலங்களுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மறுபுறம், பெர்சாத்து கட்சிக்கு தேசிய அளவில் செல்வாக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

பாஸ் தலைவர்களை விட முகைதீன் அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என்றும், அதே நேரத்தில் பெர்சாத்து மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவர்கள் இருவரின் ஆதரவையும் ஈர்க்க முடிந்துள்ளது என்றும் ராமசாமி மேலும் கூறினார்.

பாஸ் கட்சி பெர்சாத்து உடனான உறவைத் துண்டித்ததற்கான உண்மையான காரணம் பொறாமைதான் என்று தாம் நினைப்பதாக அவர் கூறினார்.

அடிப்படையில், பெர்சத்துவின் வளர்ந்து வரும் செல்வாக்கை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பதை பாஸ் கட்சி உறுதி செய்ய விரும்பியது என்று அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *