மலாக்கா தேர்தல்: BN உட்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு கதவு திறந்தே உள்ளது – அமிருடின் ஷாரி

top-news

கோலாலம்பூர், அக் 2:
மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் இன்னும் ஆர்வமாக இருப்பதாக அதன் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவது, அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வது மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
கூட்டணி அமைப்பதற்கான கதவு இன்னும் திறந்தே இருப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல், பெரிக்கத்தான் நேஷனல் மற்றும் பெர்சாத்து ஆகிய முக்கிய அரசியல் அணிகள் இருப்பதால், மலாக்கா தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் திறந்த நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
கூட்டணித் தலைவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் கிடைத்து வருவதாக தெரிவித்த அமிருடின், அனைவருக்கும் ஏற்ற இணக்கமான தீர்வைக் காண பக்காத்தான் ஹராப்பான் முயற்சிக்கும் என்றார்.
இதனிடையே, பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தவிர மற்ற எந்தக் கட்சியுடனும் இணைந்து செயல்பட பக்காத்தான் ஹரப்பான் தயாராக இருப்பதாக அமானா தொடர்புப் பிரிவு இயக்குநர் காலிட் சமாட் கூறியிருந்தார்.
ஆனால், அது காலிட் சமாட்டின் தனிப்பட்ட கருத்து என்று மலாக்கா அமானா தலைவர் அஷ்ரஃப் முக்லிஸ் மிங்காட் தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல் அல்லது பெர்சத்து உள்ளிட்ட எந்தத் தரப்புடனும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பான் திறந்தே வைத்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒத்துழைக்கப் போவதில்லை என்று பெர்சாத்து தெரிவித்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *