ஜொகூர் மாநிலத் தேர்தல்; பிகேஆர் வேட்பாளராக டாக்டர் மஸ்லீ மாலிக் களமிறங்குவாரா?
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
ஜொகூர் பாரு, ஜூன் 16 –
முன்னாள் கல்வி அமைச்சரும், முன்னாள் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மஸ்லீ மாலிக், வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) பிகேஆர் சார்பில் போட்டியிடக்கூடிய இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிகேஆர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் டாக்டர் மஸ்லீயின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் எந்த மாநிலத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. எனினும், சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்ட தொகுதிகளில் ஒன்றில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

