குடிபோதையில் கார் ஓட்டிய பெண் யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
காசர்கோடு, ஆக. 10-
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த பெண் யூடியூபர் தன்யா, குடிபோதையில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1ஆம் தேதி காசர்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தன்யா காரில் வீடு திரும்பியதாகத் தெரிகிறது. அப்போது போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த அவர், காரை நிறுத்தாமல் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் ஜீப்பில் காரை பின்தொடர்ந்து சென்று தன்யாவை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
பின்னர் தன்யா காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் ஓட்டிச் சென்ற காரையும் பறிமுதல் செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



