மலாக்கா அணி 2-0 கோல்கணக்கில் நெகிரி செம்பிலானை வென்றது

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

மலாக்கா, டிச. 8-

மலாக்கா அணி ஹாங் ஜெபாட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீகா சூப்பர் போட்டியில் நெகிரி செம்பிலான் அணியை 2-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இவ்வாட்டத்தில் பிரேசில் வீரர் ஜுவான் டக்ளஸ் போட்டி தொடங்கி வெறும் 3ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் 26ஆவது நிமிடத்திலும் அவர் அடுத்த கோலை அடித்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார். இந்த இரு விரைவான கோல்களால் நெகிரி செம்பிலான் அணி மீளவே முடியாமல் தடுமாறியது. பின்னர் போட்டி முழுவதிலும் மலாக்கா அணி ஆதிக்கம் செலுத்தி சுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டிக்குப் பிறகு பேசிய மலாக்கா பயிற்சியாளர் டத்தோ கே.தேவன், ஜுவான் டக்ளஸ் போட்டி தொடக்கத்திலேயே இரு கோல்கள் அடித்தது தான் இந்த வெற்றியின் திறவுகோல். இது எங்கள் வீரர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *