கடைசி நேர கோலால் ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்

top-news
FREE WEBSITE AD

இங்கிள்வுட், ஜூலை 10-

உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Los Angeles Stadium-இல் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களமிறங்கிய Mikel Merino மீண்டும் ஸ்பெயின் அணியின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார்.

ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் Merino அடித்த கோல், ஸ்பெயின் அணிக்கு மறக்க முடியாத வெற்றியைத் தேடித்தந்தது.

இதற்கு முன்பு போர்ச்சுகல் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றிலும், Merino வெற்றி கோலை அடித்து ஸ்பெயின் அணியை அடுத்த சுற்றுக்குக் கொண்டு சென்றிருந்தார்.

தனது தொடர்ச்சியான முக்கிய கோல்கள் அதிர்ஷ்டம் அல்ல என்றும், நல்ல தயாரிப்பின் பலன் என்றும் Merino தெரிவித்தார்.

“எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. நன்றாகத் தயாரானால், இத்தகைய தருணங்கள் மீண்டும் நிகழும். உலக சாம்பியனாக இன்னும் இரண்டு ஆட்டங்களே உள்ளன; அதுவே எங்கள் இலக்கு,” என அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *