கோலா பிலாவில் 14 வயது மாணவர் கொலை: 16 வயது சிறுவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

top-news

கோலா பிலா, அக். 8: பள்ளி விடுதியில் 14 வயது மாணவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இன்று கோலா பிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.

குற்றச்சாட்டு நீதிபதி ரோஸ்லிண்டா ரசாலி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. எனினும், கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதால், இருவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின்படி, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.50 மணி வரையிலான நேரத்தில், கோலா பிலாவில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் இரண்டாம் படிவ மாணவரான முஹம்மது இட்லான் பாரீக் ஷாரில், 14, என்பவரை இருவரும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பள்ளி விடுதிக்குள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீதும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302, அதனுடன் பிரிவு 34 இணைத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *