பக்காத்தானுடன் ஒத்துழைக்க தயார்! - அஸ்மின் அலி
- Shan Siva
- 10 Nov, 2026
கோலாலம்பூர், நவ 10: மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்க பெர்சாத்து கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானுடன் எந்தவிதமான அதிகாரப்பூர்வக் கூட்டணியும் அமைக்கப்படவில்லை என்றாலும், இரு தரப்புக்கும் இடையே இன்னும் நெருக்கமான புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெர்சத்து நிராகரிக்கவில்லை என அவர் கூறினார்.
அரசியல் நிலைத்தன்மைக்கு மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை பெர்சத்து உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக புரிந்துணர்வு இருப்பதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.
பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் வாக்காளர்கள் தங்களது முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்றும், அந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் நல்ல தோற்றத்தை வெளிப்படுத்த முயற்சிப்பது வழக்கம் என்றும் அவர் கூறினார்.
அந்தச் சூழலில், இரு தரப்புக்கும் சாதகமான உத்தியாக இருந்தால், உரிய நேரத்தில் அதைப் பரிசீலிக்கலாம் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

