2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றால் பதவி விலகத் தயார் - சர்ஜித்!

top-news

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

மலேசிய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்ஜித் சிங், 2026 ஆகஸ்டில் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்குத் தனது அணி தகுதி பெறத் தவறினால், பதவி விலகத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் முதல் அணியை வழிநடத்தி வரும் சர்ஜித், இந்த இலக்கை அடையத் தவறினால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்பதாகவும், வீரர்களை குறை கூற மாட்டேன் என்றும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளில் இந்த அணியை உரிய மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றால், நானே பதவி விலகுவேன் என அவர் மேலும் கூறினார்.

இந்த அறிவிப்பு, 2024-25 நேஷன்ஸ் கோப்பை போட்டியில் மலேசியா வேல்ஸிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களுக்கான போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்த பின்னர் வெளியிடப்பட்டது.இந்த முறை நேஷன்ஸ் கோப்பை போட்டியில் மலேசியா ஆறாவது இடத்தைப் பெற்றது. கடந்த ஆண்டு ஏழாவது இடத்தை விட ஒரு படி முன்னேறி இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறும் இலக்கை அடைய முடியவில்லை.

சர்ஜித், அணியின் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், மேலும் போட்டி தொடர்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் மன உறுதியையும் முதிர்ச்சியையும் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.2023 இல் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சர்ஜித், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு ஒரு வலுவான அணியை உருவாக்குவதற்கு நீண்டகால இலக்கை வைத்துள்ளார்.

Menteri Fadillah Yusof mengetuai delegasi Malaysia ke Uzbekistan dan Rusia bagi memperkukuh kerjasama strategik dalam bidang tenaga dan air. Lawatan ini dijangka memperluas pelaburan, teknologi serta pembangunan mampan berkaitan tenaga boleh diperbaharui.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *