4 வீடுகளில் மண்சரிவு ஏற்பட்டதற்கு தண்ணீர்க் குழாய் கசிவுதான் முக்கியக் காரணமாக இருக்கலாம்!

top-news
FREE WEBSITE AD

பத்து காஜா, செப்.30-

தஞ்சோங் துவாலாங், தாமான் தேஜாவில் 4 வீடுகளில் மண்சரிவு ஏற்பட்டதற்கு கன மழையைத் தவிர தண்ணீர்க் குழாய் கசிவுதான் முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.இதனால் அருகில் பள்ளத்தில் இருக்கும் வீடுகளும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி தெரிவித்தார்.

இருந்த போதிலும் இச்சம்பவத்திற்கான முதன்மை காரணத்தை பத்து காஜா மாவட்ட மன்றம், கிந்தா மாவட்ட மற்றும் நில அலுவலகம், பேரா தண்ணீர் வாரியம் மற்றும் இண்டா வாட்டர் ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த வீடமைப்புப் பகுதியில் தண்ணீர்க் குழாயும் பழையதாக இருப்பதால் அவற்றில் துருப்பிடித்து இருக்கக்கூடும்.இப்பகுதிக்கான சீரமைப்புப் பணிகளுக்கு ஒதுக்கீட்டுத் தொகை பெறும் விண்ணப்பத்தை பத்து காஜா மாவட்ட மன்றம் செய்யும். தற்போது மழைக் காலமாக இருப்பதால் இதர சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு சீரமைப்புப் பணிகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என்று சம்பவ இடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பவானி குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *