சூப்பர் கோப்பையில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்!

top-news

சூப்பர் கோப்பை கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது. 2-0 என கோல் கணக்கில் அடலாண்டாவை வீழ்த்தியது.
போலந்தில், ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் நடப்பு சாம்பியன்களான ரியல் மாட்ரிட் , அடலாண்டா  அணிகள் மோதின.இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ரியல் மாட்ரிட் அணிக்கு வால்வெர்டே மற்றும் எம்பாப்வே தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி வரை போராடிய அடலாண்டா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் பார்சிலோனா 5 முறைய மிலன்  அணிகளை முந்தி முதலிடம் பிடித்தது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *