ஜொகூரில் குடும்பக் கூட்ட நிகழ்ச்சியையொட்டி ஆரோக்கியம் மற்றும் கேளிக்கை நடைப்பயணம் !

top-news

குளுவாங், செப். 27-

ஜொகூர் மாநில அரசு டாருல் தக்சிம் குடும்ப மேம்பாட்டு அறக்கட்டளை மூலம் ஜொகூர் மாநில மகளிர் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து குளுவாங் மாவட்ட ஜொகூர் மகளிர் அன்பு மற்றும்ஜொகூர் மக்மோர் டத்தோ குடும்பக் கூட்ட நிகழ்ச்சியையொட்டி ஆரோக்கியம் மற்றும் கேளிக்கை நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு காலை மணி 7.30-9.00 வரை குளுவாங் மாவட்டம் வருமான வரித்துறை வளாகத்தில் இலவசமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை ஹஜ்ஜா கைரின்-நிசா பிந்தி இஸ்மாயில், ஜொகூர் மாநில பெண்கள். குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

500க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் இலவசமாக சட்டை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜொகூர் மாநில இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பேரவை (கப்பின்) தலைவர் டத்தோ தென்னரசு தலைமையில் 180 உறுப்பினர்கள் மற்றும் ஹாஜி மானான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இது போன்ற ஆரோக்கியமான செயல்களில் பங்கேற்போம் மேலும் ஆரோக்கியமாக இருப்போம் என்று கப்பின் தலைவர் டத்தோ தென்னரசு கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *