சர்க்கரை அளவைக் குறைக்கும் நிறுவனங்களுக்கு ‘ஹெல்தி சாய்ஸ்’ அங்கீகாரம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25: அமைச்சின்   ‘சர்க்கரை மீதான போர்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தங்கள் தயாரிப்புகளில் சர்க்கரை அளவைக் குறைக்கும் நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சு (MOH) ‘ஹெல்தி சாய்ஸ்’ அங்கீகாரத்தை வழங்கும்.

 மலேசியர்களிடையே சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு தொற்றாத நோய்களுக்கு (NCDs) வழிவகுக்கும் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சூல்கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.

தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற ஆய்வு  2023 இன் கண்டுபிடிப்புகள்கின் படி அதிக உடல் எடைக்கு முக்கிய காரணம் சர்க்கரை உட்கொள்வதே என்பது தெரிய வந்துள்ளது. எனவே, சர்க்கரைக்கு எதிரான போரை அறிவிக்கும் திட்டத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *