பதிலுக்காக காத்திருக்கிறோம்! - தக்கியுதீன் ஹசான்

top-news

கோலாலம்பூர்,செப் 39: மலாக்கா மாநிலத் தேர்தலில் சின்னங்களைப் பயன்படுத்துவது குறித்து சங்கங்களின் பதிவிலாகாவான RoS இடம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) விளக்கம் கோரியுள்ளது.

நேரில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது RoS-இன் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்தார்.

பெர்சாத்து (Bersatu) கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் RoS இந்த கூட்டணியை இடைநீக்கம் செய்த நிலையில், அந்தப் புகார் குறித்த விவரங்களையும் விளக்கத்தையும் PN கோருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் எங்களுக்கு எதுவும் தெரியாது. விளக்கம் அளிக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டுள்ளது, ஆனால் (பெர்சத்துவின்) புகார் எதைப் பற்றியது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. எனவே, நாங்கள் RoS-இடம் விளக்கம் கேட்டுள்ளோம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்னங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக PN-க்கு வேறு வழிகள் உள்ளனவா என்று கேட்டபோது, ​​எந்தவொரு கட்சியும் மற்றொரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்பதால் அது ஒரு பிரச்சினையல்ல என்று அவர் கூறினார்.

வேறு பல வழிகள் உள்ளன. தேர்தலில் எந்தவொரு கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, 2018-இல் அனைவரும் PKR-இன் சின்னத்தைப் பயன்படுத்தினர். பெர்சாத்து அதைப் பயன்படுத்தியது, DAP-யும் அதைப் பயன்படுத்தியது; அப்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. சின்னம் ஒரு பிரச்சினை அல்ல  என்று அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *