தமிழ் - மாண்டரின் கற்றுக்கொள்ளுங்கள்! - பாஸ் கட்சி அதிரடி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

தெமர்லோ, செப் 12: மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுடன் ஈடுபாட்டுடன் இருக்குமாறும், அவர்களின் ஆதரவை அதிகரிப்பதற்கான கட்சியின் முயற்சிகளை அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் பாஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுதீன்  உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்கள் உட்பட, மலாய்க்காரர் அல்லாத அதிகமானோர் இப்போது DAPயை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். மேலும் கட்சி இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஃப்னான் கூறினார்.

மலாய் அல்லாத சமூகங்கள் பக்காத்தான் ஹராப்பான், குறிப்பாக டிஏபிக்கு தானாக ஆதரவளிக்கின்றன என்ற கருத்துடன் பாஸ் இளைஞர் உறுப்பினர்கள் தள்ளிவிடக் கூடாது என்று அவர் கூறினார் 

அந்தவகையில், கட்சியின் தேசிய ஒருமைப்பாட்டுத்துறை மலாய்க்காரர் அல்லாத ஆதரவைப் பெறுவதற்குப் பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காடினார் 

மலாய்க்காரர் அல்லாத புரிதலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பயனுள்ள தகவல் தொடர்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,   மாண்டரின் மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றால் அதைக் கற்றுக்கொள்ளுங்கள்; தமிழ் பேச வேண்டும் என்றால்  அதைப் பேசுங்கள் என்று அறிவுறுத்தினார்.

நமது முஸ்லீம் அல்லாத நண்பர்கள், நமது கைக்கு எட்டாதவர்கள் அல்ல... சரியான  விளக்கங்களை வழங்கினால் அவர்கள் மனம் நமக்காக திறந்திருக்கும்  என்று நேற்று கெர்தாவ் அல்-மக்மூர் வளாகத்தில் நடைபெற்ற பாஸ் இளைஞர் பேரவையில் அவர் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *