மெக்காவில் அதிகரித்து வரும் வெப்பத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news

ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் இறந்ததாக செவ்வாயன்று, பல்வேறு நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் குறைந்தது 60 பேர் ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சிலர் மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது புனித யாத்திரையின் கடுமையான தன்மையை வெளிபப்டுத்துகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் மெக்கா பகுதியில் தற்போது வெப்ப அலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது. மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் திங்கட்கிழமை அன்று வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *