காங்கோவில் தீவிரமடையும் எபோலா: பலி எண்ணிக்கை 2,325 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,945 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, காங்கோவில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவது அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் சுகாதார அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



