ஏ.டி.பி. இறுதிச்சுற்று ஆண்கள் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ் வெற்றி!

top-news

பெல்கிரேட்:

ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 4ம் நிலை வீரரான ரஷியாவின் மெத்வதேவ், 7-வது நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.இதில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *