டீ கை வுன்-உலக பூப்பந்து போட்டியில் முதல் பதக்கத்தை வெல்வோம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 6-

மலேசிய ஆண்கள் இரட்டையர் குழுவின் நட்சத்திர வீரர் டீ கை வுன், இந்த மாத இறுதியில் பாரிஸில் நடைபெறவுள்ள உலக பூப்பந்து போட்டியில் முதல் பதக்கத்தை வெல்வதற்கு உயர்ந்த இலக்கை வைத்துள்ளார். மேன் வெய் சோங் உடன் இணைந்து விளையாடும் கை வுன், இந்தப் பருவத்தில் சீரான முன்னேற்றத்தைக் காட்டி, இந்தோனேசிய மாஸ்டர்ஸ், மலேசிய மாஸ்டர்ஸ் என இரண்டு பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றிகளையும் மீறி, கை வுன் தங்களது இலக்கு இன்னும் முழுமையாக அடையப்படவில்லை என்கிறார். எங்களுக்கு இரண்டு பட்டங்கள் கிடைத்துள்ளன, ஆனால் இன்னும் திருப்தி அடையவில்லை. பேட்மிண்டனில் யாரும் 'இது போதும் என்று நினைப்பதில்லை. அனைவரும் உயர்ந்த வெற்றிகளைத் துரத்துவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கை வுன், வெய் சோங் ஆகியோரின் கூட்டணி, இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அவர்களின் அபாரமான விளையாட்டு, சிறந்த ஒத்துழைப்பு, உலக போட்டியில் மலேசியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பை பிரகாசமாக்குகிறது. பாரிஸில் எங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம். முதல் பதக்கத்தை வெல்வது மட்டுமல்ல, மலேசியாவுக்குப் பெருமை சேர்க்க விரும்புகிறோம் என்று கை வுன் உறுதியுடன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *