ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு சீமான் ஆதரவு!
- Muthu Kumar
- 07 Jan, 2026
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன.
குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலம் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளார். அதே சமயம் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தோடு விஜய் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது அவசியமற்றது என்ற சீமான் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான பகவந்த் கேசரி திரைப்படத்தை தான் பார்த்ததாகவும், அதில் சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
A உள்ளிட்ட எந்த வகை சான்றிதழாக இருந்தாலும் அதனை கொடுத்து விடலாம் என்றும் எதற்காக தாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சீமான் கூறியுள்ளார். அரசியலில் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பேசி வந்த சீமான் தற்போது சினிமாவில் திடீரென விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



