முக்கிய தொகுதியில் வீரப்பன் மகளை களமிறக்கும் சீமான்!

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் தொகுதி பங்கீடு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தற்போது சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மறைந்த வீரப்பனின் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *