அட்லீ இயக்கத்தில் அதிரடி நாயகியாக களம் இறங்கும் தீபிகா படுகோனே!

top-news

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்த திரைப்படம் பேரல்ஸ் யூனிவர்ஸ் கான்செப்டில் உருவாகிறது. அதாவது ஹாலிவுட் சினிமாவில் அவதார் திரைப்படம் போன்று இந்த படத்திற்காக ஒரு கிராபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த படத்தில் மூன்று வேடங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படும் நிலையில் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் அட்லீ தீபிகாவுக்கு கதை கூறும் நிலையில் படத்தில் அவர் ஒரு வேற்று கிரகவாசி கதாபாத்திரத்தில் நடிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோவின் மூலம் இது ஒரு அதிரடி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *