கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா'!

top-news
FREE WEBSITE AD

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ்.அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள 'நடிகையர் திலகம்' மற்றும் 'சாணிக்காயிதம்' மற்றும் 'ரகுதாத்தா' போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் 'பேபி ஜான்' படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் அவர் நடித்து சில ஆண்டுகள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்த 'ரிவால்வர் ரீட்டா' படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நவம்பர் 28 ஆம் தேதி ரிவால்வர் ரீட்டா திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *