பவுலா படோசாவை வீழ்த்தி கோகோ காப் இறுதிப்போட்டிக்கு தகுதி!

top-news

பெய்ஜிங், அக்.7-

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெய்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓர் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் ஸ்பெயினின் பவுலா படோசா ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற மற்றொரு
அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா - சீனாவின் கின்வென் ஷெங் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா முச்சோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஷெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கோகோ காப் - கரோலினா முச்சோவா ஆகியோர் மோத உள்ளனர்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *