எகிப்தில் கோர விபத்து: சாலையில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி – 20 பேர் படுகாயம்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
கெய்ரோ, செப். 2 –
எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் – நுவைபா நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றது. சம்பவத்தின்போது அந்த பஸ்சில் மொத்தம் 43 பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 22 பேர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பஸ் அல் சடா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 21 பேர் சம்பவ இடத்திலேயே அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



