மனிதாபிமான அடிப்படையில் தாலிபானுக்கு உதவினோம்! - கல்வி அமைச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 21: தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு பேராளர்களை கல்வி அமைச்சு ஆதரித்தது, இஸ்லாமிய குடியரசிற்கு உதவும் புத்ராஜெயாவின் கொள்கைக்கு இணங்குவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் மனிதாபிமான உதவி அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ப்கானிஸ்தானுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க நாடு தயாராக உள்ளது என்று கடந்த ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதற்கு அமைச்சின் அர்ப்பணிப்பு இது என்று அவர் கூறினார்.

டிஏபி தலைவர் லிம் குவான் எங் இது குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, கல்வி அமைச்சு இந்தப் பதிலை வெளியிட்டுள்ளது.

பெண்கள் கல்வி தொடர்பான தலிபான் தலைமையிலான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது என்று பாகன் எம்.பியுமான லிம் தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *