மடானி அரசாங்கத்திற்கு நன்றி

top-news
FREE WEBSITE AD

வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகம் மக்கள் குடியிருப்புத் திட்டம் எனப்படும் புதிய மாதிரியான பொது வீடுகளை உருவாக்கி வருவதும் இதற்கு முன்னர் உள்ள வீடமைப்புத் திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும். ஞசுசு ஓர் ஒருங்கிணைந்த வீடமைப்பு பகுதி, நிலையான, வாழத் தகுந்த, தரமான வணிக நம்பகத்தன்மை, பசுமையான இடம், சமூக மையம் மற்றும் பிற அம்சங்களுடன் இருக்கிறது.அவ்வகையில் மடானி அரசாங்கத்தின் கீழ் பிபிஆர் வீடு பெற்றவர்கள் மடானி அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

“நாங்களும் ஒரு சொந்த வீட்டுக்கு உரிமையாளராக மாட்டோமா எனும் தவிப்பில் பல நாட்கள் இருந்திருக்கிறோம். மலிவு விலை வீட்டுப் பெறுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மடானி அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் எனது குடும்பத்துடன் முன்பு தோட்டத்தில் வாழ்ந்தேன். அதன் பிறகு நான் என் மகனுடன் சொந்த வீட்டில் வசிக்கிறேன்“ என்று திருமதி.கலா கூறினார்.

“எனது மனைவி இறப்பிற்கு பின் என் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிறிய பட்டணத்திலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்தேன். எனக்கு தகுந்த வேலை கிடைத்தும் வீட்டிற்கு மிகவும் அவதிப்பட்டேன். பல முயற்சிகளுக்கு பிறகு பிபிஆர் வீட்டை அரசு வழங்கியது. சிறிய வீடாக இருந்தாலும் நானும் என் பிள்ளைகளும் சந்தோஷமாகவும் அதே வேளையில் பாதுகாப்பாகவும் இருக்கிறோம். பிரதமருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு ஆறுமுகம் கூறினார்.

 “பிபிஆர் ரக வீடுகளை வழங்கியதற்காக அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சொந்த வீடு இல்லாத, வாங்க முடியாத, பெரிய அளவில் கடனுதவி பெற முடியாத மக்களுக்கு உதவுவதில் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளது. இந்த முயற்சியை நான் பெரிய அளவில் ஆதரிக்கிறேன். கைவிடப்பட்ட மேலும் பல வீடமைப்பு திட்டங்களை அரசாங்கம் விரைவாக எடுத்து நடத்த வேண்டும்“ என்று சமூக ஆர்வலர் திரு. பாலா கூறினார்.

பி40 குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் வாங்குவதற்கு இலகுவான முறையில் பிபிஆர் வீடுகள் இருக்கிறது. அரசாங்கம் மக்களுக்கு ஏற்படுத்தி தந்த திட்டங்களில் இது மிகவும் சிறப்பானது. சொகுசான வீட்டு கனவுகள் அனைவருக்கும் இருக்கும். ஆனால் பெரிய அளவில் கடனில் சிக்காமல் இருக்க என்னைப் போன்றவர்களுக்கு பிபிஆர் வீடுகளே சிறப்பானது. சிறு வீடாக இருந்தாலும் அது சிறப்பான வீடு. மடானி அரசாங்கத்திற்கு நன்றிகள் என்று திருமதி வள்ளி தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *