மலாக்கா தேர்தல் - 15 இடங்களில் பெர்சாமா போட்டி!
- Shan Siva
- 16 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 16: வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சாமா 15 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிக் நஸ்மி நிக் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும், மெர்லிமாவு சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அக்மல் சலேவின் சகோதரரான டாக்டர் சோலஹின் சலே, பெம்பான் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு "புதிய அடையாளம்" என்பதால், பெர்சாமா தன்னை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள இன்னும் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது என்று நிக் நஸ்மி கூறினார்.
வேட்பாளர்கள் தங்களை வாக்காளர்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக, அவர்களை முன்கூட்டியே அறிவிக்கிறோம். வாக்காளர்களை முன்கூட்டியே நேரில் சந்திக்கும்போது ந ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று அவர் நேற்று இரவு மலாக்காவில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில், கட்சி போட்டியிடும் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், மாநில அரசை அமைப்பதற்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போதுமானவை என்று ரஃபிஸி ராம்லி கூறினார்.
அரசாங்கம் அமைக்க எளிய பெரும்பான்மைக்கு பதினைந்து இடங்கள் தேவை.அனைவரின் வாக்குகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டு, நாங்கள் அந்த 15 இடங்களிலும் வெற்றி பெற்றால், இறைவனின் அருளால், மலாக்காவில் ஒரு 'கான்சில்' முதலமைச்சர் இருப்பார்," என்று அவர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் கூறினார்.
வேட்புமனு தாக்கல் நாளன்று இரவு பெர்சாமா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று ரஃபிஸி கூறினார்.
மலாக்கா தேர்தல்கள் 2027 பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற வேண்டும், ஆனால் முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோ, அவை அடுத்த மாதமே நடத்தப்படலாம் என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



