மலாக்கா தேர்தல்: முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் இளைஞர்களின் வாக்குகள்!
- Shan Siva
- 13 Nov, 2026
கோலாலம்பூர், நவ 13: நாளை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களில் 68 விழுக்காட்டினர் நல்லாட்சி, நேர்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
கட்சிப் பற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்காமல், மாநிலத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மலாக்காவுக்கு வெளியே வசிக்கும் வாக்காளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பி வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும், 75 விழுக்காடு வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அட்லி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

