சிலாங்கூர் மாநில சிலம்பக் கோர்வைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு சிலம்பப்போட்டி!

top-news

ஷாஆலம், செப். 29-

சிலாங்கூர் மாநில சிலம்பக் கோர்வைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு சிலம்ப விளையாட்டுப்போட்டி இன்று ஷா ஆலம் செக்ஷன் 19 தஞ்சோங் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த விளையாட்டுப் போட்டிக்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை மேற்கொள்கிறார் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நித்தியானந்தன் தியாகராஜன் தெரிவித்துக் கொள்கிறார்.

இப்போட்டியில் சிப்பாங், உலுலங்காட், கோலலங்காட், பெட்டாலிங் ஜெயா, பெட்டாலிங் பெர்டானா, கோம்பாக், உலுசிலாங்கூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இப்போட்டியின் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் முதல் 2 சிலம்ப மாணவர்கள் தேசிய சிலம்பக் கோர்வை போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். சுற்றுவட்டார மக்களும் சிலம்ப ஆர்வலர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு நித்தியானந்தன் கேட்டுக்கொண்டார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *