பினாங்கிடம் தோல்வி: அடுத்த ஆட்டத்தில் மலாக்கா எப்.சி. மீண்டு வரும் – இளவரசன் நம்பிக்கை
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
மலாக்கா, செப். 3 –
எப்.ஏ. கோப்பை கால்பந்து போட்டியில் பினாங்கு எப்.சி. அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் மெலாக்கா எப்.சி. தோல்வியடைந்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இன்னும் திறந்தே இருப்பதாக அணியின் பயிற்சியாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஹாங் ஜெபாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மெலாக்கா எப்.சி. கடுமையாக போராடியபோதும், ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து இளவரசன் கூறுகையில், ஒரு கோல் பின்னடைவு என்பது பெரிய இடைவெளி அல்ல என்றும், இரண்டாவது கட்ட ஆட்டத்தில் அதை சரிசெய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“1-0 என்ற முடிவு மிகவும் குறுகிய வித்தியாசம். அடுத்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பே உள்ளது. எனவே போட்டி இன்னும் 50-50 என்ற நிலையில்தான் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



