சரவாக்கில் ஹெலிஹாப்டர் விபத்து! சுகாதார அமைச்சின் ஐவர் பலி!
- Shan Siva
- 09 Sep, 2026
கோலாலம்பூர், செப் 9: சரவாக்கில் உள்ள லாங் லெல்லாங் (Long Lellang) STOLport-க்கு அருகில் நேற்று BO-105 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர்.
முன்னதாக இந்த விபத்தை மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியது.
விமானி உட்பட ஐந்து பேருடன் 'பறக்கும் மருத்துவர் சேவை' (Flying Doctor Service) பணியில் அந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது என்று அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் அதிகாரப்பூர்வ பணியில் இருந்த அமைச்சக ஊழியர்கள் என்றும், அவர்களில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருத்துவ உதவியாளர் மற்றும் இரண்டு செவிலியர்கள் அடங்குவர் என்றும் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அகமது (Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான 'பறக்கும் மருத்துவர் சேவை' (FDS) குழுவானது, சரவாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

