பெண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கெல்லி தியோ யாவ்க்கு தங்கம்!

top-news

சுக்மா 2024 பெண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சரவாக்கின் வீராங்கனையான கெல்லி தியோ யாவ் தனது ஆறாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.கெல்லி 17:56.21 என்ற விரைவான நேரத்தில் தன் இலக்கை கடந்தார்.மேலும் தனது சக போட்டியாளரானபோட்டியாளரான சபாவின் சூ சின் யிங் 18:10.61 நேரத்தில் இலக்கை கடந்தார்.பினாங்கின் யோ யுன் சுவான் 18:19.76 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த  வெற்றியானது கெல்லியின் விளையாடிய போட்டிகளில்  சிறப்பான செயலை காட்டுகிறது.இதற்கு முன்  200மீ ஃப்ரீஸ்டைல் ​​(2:05.12), 200மீ பேக்ஸ்ட்ரோக் (2:18.47), 400மீ தனிநபர் மெட்லே (5:02.95), 800மீ ஃப்ரீஸ்டைல் ​​(9) ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்.

சரவாக் அணி வீரரான ஹி புவாங் வெய் ஆண்களுக்கான 100 மீ பேக் ஸ்ட்ரோக்கில் 57.87 நேரத்துடன் தன் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.அதே போட்டியில் சிலாங்கூர் வீரர் தியோ கர் சுவான் 59.06 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், டேவிட் லீ பூன் 59.75 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *