ஸ்டார்லிங்கை இந்தியாவில் தடுக்கவில்லை: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

top-news

புதுடெல்லி, அக். 8: இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை அறிமுகமாவதை சில சக்திவாய்ந்த தரப்புகள் தடுக்கின்றன என்ற எலான் மஸ்கின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 11,256 கிராமங்களுக்கு இன்னும் 4ஜி சேவை கிடைக்கவில்லை என்ற தகவலைத் தொடர்ந்து, தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள சில நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்கின்றன என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் இந்திய மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டார்லிங்க் உட்பட 3 நிறுவனங்களுக்கு GMPCS உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *